Home /News /national /

திருப்பதி செல்ல திட்டமா? அங்கபிரதட்சனம் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு தேதி அறிவிப்பு

திருப்பதி செல்ல திட்டமா? அங்கபிரதட்சனம் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு தேதி அறிவிப்பு

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

ஏழுமலையான் கோவில் அக்டோபர் மாதம் அங்கப்பிரதேசம் செய்வதற்கான டோக்கன்கள் 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirumala, India
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான  ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள், அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், அங்க பிரதட்சணம் செய்வதற்குரிய டோக்கன்கள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை இம்மாதம் 21,22 ஆகிய நாட்களில் தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

    நவம்பர் மாதம் 300 ரூபாய் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான டிக்கெட்டுகள் இம்மாதம் 21ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குரிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 21ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மின்னணு குலுக்கல் முறையின் மூலம் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கட்டண சேவை டிக்கெட்கள் இம்மாதம் 21 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதையும் படிங்க: புண்ணிய மாதம் புரட்டாசி - கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடு முறைகள்!

    ஏழுமலையான் கோவில் அக்டோபர் மாதம் அங்கப்பிரதக்ஷனம் செய்வதற்கான டோக்கன்கள் 22 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. சேவை டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Tirumala, Tirumala Tirupati

    அடுத்த செய்தி