ஹோம் /நியூஸ் /இந்தியா /

சந்திர கிரகணம் : நவம்பர் 8ஆம் தேதி திருப்பதியில் 11 மணிநேரம் நடை மூடல்... முழு விவரம் இதோ

சந்திர கிரகணம் : நவம்பர் 8ஆம் தேதி திருப்பதியில் 11 மணிநேரம் நடை மூடல்... முழு விவரம் இதோ

திருமலை திருப்பதி கோவில்

திருமலை திருப்பதி கோவில்

நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் 11 மணிநேரம் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  வரும் செவ்வாய் கிழமை (நவம்பர் 8ஆம் தேதி) பிற்பகல் மணி 2.39க்கு துவங்கி மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 8.40 மணி முதல் 7.20 மணி வரை திருப்பதியில் நடை திறக்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- சந்திர கிரகண நாளான்று காலை மணி 8.40 முதல் மாலை 7.20 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.

  கிரகணம் முடிந்த பின் சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். எனவே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8ஆம் தேதி, திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு நேரம் குறித்து டோக்கன்கள் வழங்கும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.விஐபி தரிசனம், சஹஸ்ர தீபாலங்கார சேவை, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் போன்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 16ம் தேதி திறப்பு!

  அதேபோல், திருப்பதி மலையில் கிரகண நேரத்தில் அன்னதான கூடம் மூடப்பட்டிருக்கும். எனவே, இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் பயண அட்டவணையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Lunar eclipse, Tirumala, Tirumala Tirupati, Tirupati temple