Home /News /national /

திருப்பதி போக திட்டமா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

திருப்பதி போக திட்டமா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

திருப்பதி

திருப்பதி

நேற்று ஒரே நாளில் சுவாமியை 68,128 பக்தர்கள் தரிசித்தனர். 34,021பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி நேற்று ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதும் நிலையில் இன்று இலவச தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 64 அறைகளும் நிரம்பி உள்ளன. அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

    இதனால் 18 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை இலவசமாக வழிப்பட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்காகவும் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. இதனால் நீங்கள் திருப்பதி போக திட்டமாக இருந்தால் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின் தான் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய முடியும். அதனை மனதில் வைத்து கொண்டு திருப்பதி பிளானை நீங்கள் திட்டமிடுங்கள்.

    பக்தர்கள் கூட்டம்


    மேலும் நேற்று ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையானை 68,128 பக்தர்கள் தரிசித்தனர். 34,021பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி  ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Tirumala, Tirumala Tirupati

    அடுத்த செய்தி