Home /News /national /

80 நாட்களுக்கு பின், இன்று முதல் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் திருப்பதி ஏழுமலையான்... சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

80 நாட்களுக்கு பின், இன்று முதல் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் திருப்பதி ஏழுமலையான்... சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

ஊரடங்கு நடைமுறை காரணமாக 80 நாட்களுக்கு பின் இன்று காலை ஆறரை மணியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.

    ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, இன்று முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில அரசின் உத்தரவு அடிப்படையில் இன்று துவங்கி இரண்டு நாட்கள் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும்,எ10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 6000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் அளிக்கப்படுகிறது.

    அதன்பின் வரும் 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோவில், சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுண்டர் ஆகிய உள்ளிட்ட இடங்களில் இடைவெளியை கடைபிடித்து 6 அடி தூரத்திற்கு ஒருவர் நிற்கும் வகையில் ரேடியம் ஸ்டிக்கர்கள் தரையில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஏழுமலையான் கோவில், அன்னதான கூடம் ஆகியவை உள்ளிட்ட இடங்களில் கால் விரல்களால் இயக்கக்கூடிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் ஏழுமலையான் கோவில் உண்டியலை தொட பக்தர்கள் விரும்பினால் முன்னதாக கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்வதற்கான வசதியும் உண்டியல் அருகே செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோர் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் திருப்பதி மலைக்கு கொரோனா அறிகுறிகள் உள்ள பக்தர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் ஆகியோர் கண்டிப்பாக வரக்கூடாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோவிலுக்குள் வரிசையாக செல்ல வேண்டுமென்றும் தேவஸ்தானம் பக்தர்களை கேட்டு கொண்டுள்ளது.

    இந்தநிலையில் 80 நாட்களுக்கு பின் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் ஏழுமலையான் கோவிலை சுமார் இரண்டரை டன் எடையுள்ள பல்வேறு வகையான உள்ளூர் மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் ஆகியவற்றால் அலங்கரித்துள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்தில் துவங்கி ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி கும்பிடும் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சில நாட்கள் மணிக்கு 500 பேர் என்ற கணக்கில் 6000 பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட உள்ளனர். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற கணக்கில் இன்று முதல் ஆன்லைனில் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது.

    இது தவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்கள் தினமும் இலவச தரிசனத்திற்கான 3 ஆயிரம் டிக்கெட்டுகளை 11-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vijay R
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati

    அடுத்த செய்தி