கொரோனா பரவல்: திருமலை திருப்பதியில் புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேவஸ்தானம்

திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொரோனா பரவல் காரணமாக புதிய விதிமுறைகளை வெளியிட்டதால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

 • Share this:
  திருமலை திருப்பதி தேவஸ்தானம், கொரோனா பரவல் காரணமாக புதிய விதிமுறைகளை வெளியிட்டதால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பாதிப்பின் அளவு அதிகமாகியுள்ளது.

  இந்நிலையில், ஆந்திராவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, “தரிசன டிக்கெட் பெற்று, நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள், 24 மணிநேரத்திற்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவர். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள், மதியம், 1 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இந்த அறிவிப்புகளை முறையாக அறியாத பக்தர்கள் பலர் வழக்கம் போல் திருமலைக்கு செல்ல அலிபிரி சோதனைச் சாவடியில் குவிந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Must Read : கடந்த 68 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் நேற்று கடுமையான வெயில்

   

  கொரோனா கட்டுப்பாட்டிற்காக, தேவஸ்தானம் அமல்படுத்தும் புதிய விதிமுறைகளால் பக்தர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும் என்றும் பத்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
  Published by:Suresh V
  First published: