Hanuman Birthplace : திருப்பதி திருமலையில்தான் அனுமன் பிறந்தார் : தேவஸ்தானம் அறிவிப்பு

Hanuman Birthplace : திருப்பதி திருமலையில்தான் அனுமன் பிறந்தார் : தேவஸ்தானம் அறிவிப்பு

அனுமன்

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலையில்தான் ராம பக்தர் ஆஞ்சநேயராகிய அனுமன் பிறந்தார் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

  • Share this:
    திருப்பதி திருமலையில் அமைந்துள்ள சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலையில்தான் ராம பக்தர் ஆஞ்சநேயராகிய அனுமன் பிறந்தார் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

    அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ‘வெங்கடாசல மகாத்மியம்’ உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம் திருப்பதி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு செய்ய தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய குழுவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது.

    அந்தக் குழுவினர் 4 மாதங்களாக ஆய்வு நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அந்த அறிக்கையில் ‘திருமலை திருப்பதி கோயில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய அருபது பக்கம் கொண்ட கையேடும் வெளியிடப்பட்டது. ராம நவமி தினமான நேற்று, திருமலை திருக்கோவிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் முன்னிலையில் இந்த அறிவிப்பை திருப்பதி திருமலை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த ஆய்வுப் பணிக்காக, ஆய்வு செய்யப்பட்ட 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12, 13ஆம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Must Read : ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி விற்பனை செய்தால் நடவடிக்கை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

     

    கர்நாடகா மாநிலம், ஹம்பியில் தான் அனுமன் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது. அத்துடன், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி, குஜராத்தில் உள்ள நவ்சாரி, ஹரியானாவில் உள்ள கைத்தல் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும் அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: