திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்காக ஓய்வு அறைகள் கட்ட முடிவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 67.29 கோடி ரூபாயில் 384 அறைகளுடன் கூடிய வளாகம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கட்டப்பட உள்ளது.

Web Desk | news18
Updated: January 8, 2019, 6:33 PM IST
திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்களுக்காக ஓய்வு அறைகள் கட்ட முடிவு!
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Web Desk | news18
Updated: January 8, 2019, 6:33 PM IST
திருப்பதி மலை அடிவாரதில் ரூ. 67.29 கோடி செலவில் 384 அறைகளுடன் கூடிய பக்தர்கள் ஓய்வு அறை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் சுதாகர் யாதவ் தலைமையில் திருமலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் சுதாகர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 67.29 கோடி ரூபாயில் 384 அறைகளுடன் கூடிய வளாகம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கட்டப்பட உள்ளது.

ஏழுமலையான் கோவிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக 1,050  கண்காணிப்பு கேமராக்கள் 15.79 கோடி ரூபாய் செலவில் அமைப்படவுள்ளது.  திருப்பதி மலையில் சர்வ தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்காக  புதிய வரிசைகள் அமைக்க 17.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஸ்மார்ட் டேட்டா சென்டர் அமைப்பதற்கு 2.63 கோடி ரூபாயும்,  திருப்பதியில் ஹார்டுவேர் டேட்டா சென்டர் அமைக்க 1.97 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுரம், கண்ணாடி மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, புஷ்கரணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக 27.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 142 கோடி ரூபாயில் அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் 4 கட்டங்களாக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்படும்.

அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டுமானப் பணிக்கு இந்த மாதம் 31-ம் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜை செய்ய உள்ளார். தேவஸ்தானத்திலிருந்து கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து ஆந்திர அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்றார் சுதாகர் யாதவ்.

Also watch

First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்