Home /News /national /

திருப்பதி பிரமோற்சவம்: குதிரை வாகனத்தில் வலம்வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி பிரமோற்சவம்: குதிரை வாகனத்தில் வலம்வந்த மலையப்ப சுவாமி

குதிரை வாகனம்

குதிரை வாகனம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையன் கோவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான குதிரை வாகன சேவை, வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையன் கோவில் பிரமோற்சவ நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பிரமோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று இரவு, உற்சவர் மலையப்ப சுவாமியின் குதிரை வாகன சேவை நிகழ்ச்சி, கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது. இதில் பிரமாண்டமான குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வலம் வந்தார்.

    குதிரை வாகனத்தில் செல்லும் மலையப்பர்


    குதிரை வாகன சேவையை முன்னிட்டு,  சர்வ அலங்கார திருக்கோலம் பூண்ட மலையப்ப சுவாமி, மாடவீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்களை கவரும் வண்ணம் நடைபெற்றன. இதனை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

    மேலும் பிரமோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சிகளான சக்கர ஸ்நானம் இன்று காலையும், கொடியிறக்கம் இரவும் நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும். அதன்பின் கொடியிறக்கத்துடன் திருப்பதி வருடாந்திர பிரமோற்சவம் நிறைவடைகிறது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Brahmotchavam, Tirpathi

    அடுத்த செய்தி