ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் விழா.. சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

திருப்பதி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் விழா.. சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

2ம் நாள் பிரமோற்சவம் - திருப்பதி

2ம் நாள் பிரமோற்சவம் - திருப்பதி

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்பசாமியின் சின்ன ஷேச வாகன சேவை நடைபெற்றது. (செய்தியாளர்: புஷ்பராஜ்)

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமிக்கு சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது.

  சின்னசேஷ வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க சின்ன ஷேச வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு திருவாபரண சமர்ப்பணம், தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை சாஸ்திர முறையில் நடத்தப்பட்டன.

  தொடர்ந்து வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து சாமி கும்பிட்டனர்.

  Also see... திருப்பதி பிரம்மோற்சவம் முதல் நாள் விழா.. பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

   யானைகள், குதிரைகள், காளைகள் முன் செல்ல பக்தர்கள் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபடி அணிவகுக்க, ஜீயர்கள் தலைமையிலான திவ்ய பிரபந்த கோஷ்டி திவ்ய பிரபந்தகளை இசைத்தவாறு வழிநடத்த, வேத பண்டிதர்கள் வேதங்களை ஓதியவாறு பின் தொடர கண்கொள்ளா காட்சியாக நடைபெற்ற ஏழுமலையானின் சின்னசேஷ வாகன சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupati brahmotsavam