முகப்பு /செய்தி /இந்தியா / தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை

லட்டு

லட்டு

"தமிழகத்திலும் லட்டு விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்"

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழுமலையான் கோவில் எப்போது திறக்கப்படும் என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்தார். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, 50 ரூபாய்க்குப் பதிலாக 25 ரூபாய்க்கு வெள்ளிக்கிழமை முதல் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுப்பாரெட்டி கூறினார்.

லட்டு பிரசாதம் மொத்தமாக தேவைப்படும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத்தை 9849575952 என்ற செல்போன் எண்ணிலும், லட்டு தயாரிப்பு அதிகாரியை 9701092777 எண்ணிலும் தொடர்பு கொண்டு லட்டுகளை மொத்தமாக ஆர்டர் செய்து எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் லட்டு விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சுப்பாரெட்டி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... 


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Laddu, Lockdown, Thirumala