ஹோம் /நியூஸ் /இந்தியா /

சூரிய கிரகணம் காரணமாக திருப்பதியில் நாளை நடை அடைப்பு - விவரங்கள் இதோ!

சூரிய கிரகணம் காரணமாக திருப்பதியில் நாளை நடை அடைப்பு - விவரங்கள் இதோ!

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

நாளை காலை மணி 8.11 முதல் மாலை 7.40 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirumala, India

  செவ்வாய் கிழமையான நாளை (அக்டோபர் 25ஆம் தேதி) மாலை மணி 5.11 க்கு துவங்கி மாலை மணி 6. 27 வரை சூரிய கிரகணம் நிகழவுள்ளது. எனவே, நாளை திருப்பதியில் நடை திறக்கப்படாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, காலை மணி 8.11 முதல் மாலை 7.40 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.

  கிரகணம் முடிந்த பின் சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை நாளை இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

  இதையும் படிங்க: சூரிய கிரகணம் 2022 | என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது.!

  கிரகணம் காரணமாக நாளை ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நடைபெறாது. அதேபோல் திருப்பதி மலையில் நாளை காலை தொடங்கி கிரகண முடியும் வரை அன்னதான கூடம், விடுதி ஆகியவையும் மூடப்பட்டிருக்கும். எனவே, இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் பயண அட்டவனையை திட்டமிடுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Solar eclipse, Temple, Tirumala, Tirumala Tirupati