திருப்பதி ஏழுமலையான் கோயில் பூரணகும்ப கலசம் சிலுவை போன்று அலங்காரம் என முகநூலில் பதிவிட்ட அதிகாரி மீது வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பூரணகும்ப கலசம் சிலுவை போன்று அலங்காரம் என முகநூலில் பதிவிட்ட அதிகாரி மீது வழக்கு

கோயிலில் கோபுர கலச அலங்காரம் குறித்து சர்ச்சை

பூரணகும்ப கலசம் என கூறி சிலுவை அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக தால பத்ரா நிதி நிறுவனம், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தது.

 • Share this:
  திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர அலங்கார விளக்குகளை சிலுவை வடிவில் இருப்பதாக கூறி முகநூலில் பதிவிட்ட நிறுவனத்தின் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆனால், பூரணகும்ப கலசம் என கூறி சிலுவை அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக தால பத்ரா நிதி நிறுவனம், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தது. இது இணையத்தில் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் பதிவிட்டு பக்தர்களிடையே புரளியை கிளப்பியதாக தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்தனர்.

   

     இதன் அடிப்படையில் பூரண கும்ப கலச அலங்காரத்தை சிலுவை என பதிவு செய்த தாலா பத்ரா நிதி முக நூல் பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: