• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மத்தியில் பாஜக-மாநிலத்தில் திமுக: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

மத்தியில் பாஜக-மாநிலத்தில் திமுக: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

பாஜக

பாஜக

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 283 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று TIMES NOW கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெறும் என கணித்துள்ளது.

    மத்தியில்...

    2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து Times Now மற்றும் VMR இணைந்து நாடு முழுவதும் 17, 000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன் முடிவில், மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 283 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 இடங்களிலும், இதர கட்சிகள் 125 இடங்களிலும் வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த 38.5 வாக்கு விழுக்காடு, எதிர்வரும் தேர்தலில் 40.1 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும், காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்கு வங்கி 23 விழுக்காட்டில் இருந்து 30.6 விழுக்காடாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மாநிலத்தில்...

    மாநில வாரியாக பார்த்தால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 34 இடங்களில் வெற்றிபெறும். அதில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    அத்துடன், திமுக கூட்டணிக்கு 52.20 விழுக்காடு வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 37.20 விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிற தென் மாநிலங்களான கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு 16 இடங்களும், கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 3 இடங்களும், பாஜக-வுக்கு ஓர் இடமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கர்நாடகா:

    மேலும், கர்நாடகாவில் பாஜக-வுக்கு 15 தொகுதிகளும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    ஆந்திரா:

    ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும்.

    தெலுங்கானா:

    மேலும் தெலுங்கானாவில், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 13 தொகுதிகளையும், பாஜக-வுக்கு 2 தொகுதியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஒரு தொகுதியும், பிற கட்சிக்கு ஒரு தொகுதியிலும் கிடைக்க வாய்ப்புள்ளதாக Times Now மற்றும் VMR கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    Also see... அதிமுக வாரிசுகள் VS திமுக வாரிசுகள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: