Home /News /national /

தேர்தல் தோல்வி: காங்கிரஸை எங்களோடு இணைத்துவிடலாம்: திரிணாமுல் தலைவர்கள் அழைப்பு

தேர்தல் தோல்வி: காங்கிரஸை எங்களோடு இணைத்துவிடலாம்: திரிணாமுல் தலைவர்கள் அழைப்பு

காங்கிரஸ் - டிஎம்சி

காங்கிரஸ் - டிஎம்சி

தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை திரிணாமுல் காங்கிரஸுடன் இணைக்க வேண்டும். இதற்கு இதுவே சரியான நேரம் என்று திரிணாமுல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிடலாம் என்று மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், ஏனைய 4 மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தை இழந்துள்ளதோடு, பிற மாநிலங்களிலும் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.

    தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘ தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்கள் நலனுக்கான பணிகள் தொடரும்’ என்று கூறியிருந்தார். தேர்தல் தோல்வி காரணமாக கடும் விமர்சனங்களை காங்கிரஸ் சந்தித்து வருகிறது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ஃபர்காத் ஹக்கீம், 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் பா.ஜ.க.வை எதிர்த்து எப்படி போராடும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் போன்ற பழமையான கட்சி ஏன் காணாமல் போகிறது என்று தெரியவில்லை. நாங்களுன் அக்கட்சியின் ஒரு பகுதிதான். தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை திரிணாமுல் காங்கிரஸுடன் இணைக்க வேண்டும். இதற்கு இதுவே சரியான நேரம். தேசிய அளவில் மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் கொள்கைகளை கொண்டு (நாதுராம்) கோட்சேவின் கொள்கைகளுக்கு எதிராக போராடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்கள் நலனுக்கான பணிகள் தொடரும்


    இதேபோல், காங்கிரஸால் பாஜகவை எதிர்த்து போரிட முடியாது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் மம்தா பானர்ஜி போன்ற தலைவர் தேவை. இதனை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்றூ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Congress, Election 2022, TMC

    அடுத்த செய்தி