ஹோம் /நியூஸ் /இந்தியா /

பழைய சவால்களை கைவிட்டு புதிய வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் - ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

பழைய சவால்களை கைவிட்டு புதிய வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் - ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தங்கள் மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக ஜம்மு காஷ்மீரின் ஏராளமான இளைஞர்கள் முன் வருவதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் இன்று காணொளி வாயிலாக உரையாடினார். இந்நிகழ்வில், ஜம்மு காஷ்மீரின் 20 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 3,000 இளைஞர்களுக்கு அரசு பணியில் சேர்வதற்கான நியமன ஆணையை வழங்கி உத்தரவிட்டார்.

  நிகழ்வில் பிரதமர் பேசுகையில் "அவர் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு இன்று மிக முக்கிய நாள். ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இது முக்கியமான தருணம். பழைய சவால்களை விட்டொழித்து புதிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான தருணம் இது. தங்கள் மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக ஜம்மு காஷ்மீரின் ஏராளமான இளைஞர்கள் முன் வருவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

  வேகமான வளர்ச்சிக்கு புதிய அணுகுமுறையோடும், புதிய சிந்தனையோடும் நாம் பணியாற்ற வேண்டும். 2019 முதல் 30,000 அரசு பணியிடங்கள் ஜம்மு காஷ்மீரில் நிரப்பப்பட்டுள்ளது. இவற்றுள் 20,000 வேலைகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்கள் முதல் சர்வதேச விமானங்கள் வரை காஷ்மீருக்கான இணைப்பை ஊக்குவிக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

  ஸ்ரீநகர் முதல் ஷார்ஜா வரையிலான சர்வதேச விமான சேவை ஏற்கனவே தொடங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரின் ஆப்பிள் விவசாயிகளுக்கு இங்கிருந்து வேற்று மாநிலங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கான இணைப்புகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளும் அதிக அளவில் பயனடைந்துள்ளனர்.

  ஜம்மு காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், 7 புதிய மருத்துவக் கல்லூரிகள், 2 மாநில புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் 15 செவிலியர் கல்லூரிகள் என ஜம்மு காஷ்மீரின் சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

  இதையும் படிங்க: கங்கனா பாஜகவில் சேரலாம்... ஆனால்..? - தேசிய தலைவர் நட்டா வைத்த நிபந்தனை!

  ஜம்மு காஷ்மீர் தான் ஒவ்வொரு இந்தியரின் பெருமை. அனைவரும் ஒன்றிணைந்து ஜம்மு காஷ்மீரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 2047ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியா என்ற மிகப்பெரிய இலக்கும் நம் முன்னே உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு வலுவான உறுதியுடன் தேச கட்டமைப்பில் நாம் ஈடுபட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Government jobs, Jammu and Kashmir, PM Modi