முஸ்லிம்கள் பற்றி இந்துத்துவ அமைப்புகள் கூறும் கட்டுக்கதைகளை உடைக்கும் நேரம் வந்து விட்டது: முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கடும் விமர்சனம்

முஸ்லிம்கள் பற்றி இந்துத்துவ அமைப்புகள் கூறும் கட்டுக்கதைகளை உடைக்கும் நேரம் வந்து விட்டது: முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கடும் விமர்சனம்

அதே போல் இஸ்லாம் பெண்களை மோசமாக நடத்துகிறது என்று பரப்பப்படுகிறது, ஆனால் அதிலும் உண்மையில்லை. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு ஆண்களுக்கும் இடையே சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு சொத்துரிமை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது. ஆனால் மற்ற பெண்களுக்கு 20-ம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது.

 • Share this:
  முஸ்லிம்களை ஆபத்தானவர்கள் என்று நம்பவைப்பதற்காக இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டு வரும் கட்டுக்கதைகளை உடைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளார்.

  தனது புதிய புத்தகமான “The Population Myth: Islam, Family Planning and Politics in India” என்ற புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:

  முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பொய்க் கதைகள், தகவல்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகின்றன. ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்தியாவை முஸ்லிம் நாடாக்கும் வகையில், தங்கள் மக்கள் தொகையை, முஸ்லிம்கள் அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

  மக்கள் தொகையை உயர்த்துவதற்காக, பலதார முறையை, முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருவதாக கூறுகின்றனர். கடந்த, 1931 முதல், 1960 வரை எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அனைத்து சமூக மக்களிடையேயும், பலதார முறை இருந்தது. ஆனால், அது படிப்படியாக குறைந்துள்ளது. முஸ்லிம்களிடையே இது மிகக் குறைவாக உள்ளது. நாட்டில், 1,000 ஆண்களுக்கு, 924 பெண்கள் இருக்கும்போது, எப்படி பல தார முறைக்கு சாத்தியம் உள்ளது. இஸ்லாம், குடும்பக் கட்டுப்பாடு முறைக்கு எதிரானது என்றும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

  ஒரு பொய்யை திரும்பத் திரும்ப 100 முறைக் கூறினால் அது உண்மை என்று நம்பப்படும்.

  கடந்த, 70 ஆண்டுகளில், இந்துக்களின் மக்கள் தொகை, 84.1 சதவீதத்தில் இருந்து, 79.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக்குவர் என்கின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை. அதுபோன்று திட்டமிட்டு எதுவும் செய்யப்படுவதில்லை.

  முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்து மக்களிடையே ஒரு பயத்தையும், பீதியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில், இது போன்ற பொய் பிரசாரம் நீண்டகாலமாக திட்ட மிட்டு நடந்து வருகிறது. அதை முறியடிப்பதற்கான நேரம் தற்போது வந்துள்ளது.

  குடும்பக் கட்டுப்பாட்டை குரான் தடை செய்யவில்லை என்று நான் கூறிவருகிறேன். மாறாக குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது, ஆனால் இது பல ஆண்டுகளாகத் திரிக்கப்பட்டு மறைக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமென்றால்தான் இளைஞர் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தாயாரின் ஆரோக்கியம், குழந்தையின் ஆரோக்கியம், முறையாக வளர்ப்பதற்கான ஆதாரங்களை வலியுறுத்துகிறது.

  முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் பிறக்கிறது என்றால் புள்ளிவிவரங்களின்படி இந்துக்களுக்கும் அதற்கு நெருக்கமான அளவில் குழந்தைகள் பிறக்கின்றன.

  1951 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களை விட இந்துக்கள் எண்ணிக்கை 30 கோடி அதிகம் இது 2011-ல் இது 80 கோடியாக அதிகரித்துள்ளது.

  அதே போல் இஸ்லாம் பெண்களை மோசமாக நடத்துகிறது என்று பரப்பப்படுகிறது, ஆனால் அதிலும் உண்மையில்லை. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு ஆண்களுக்கும் இடையே சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு சொத்துரிமை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வந்து விட்டது. ஆனால் மற்ற பெண்களுக்கு 20-ம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது.

  அதே போல் முஸ்லிம்களை வாக்கு வங்கி என்கின்றனர். பெங்கால் கேரளாவில் 30%, உபி. பீகாரில் 20% இருந்தும் அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியவில்லை. சும்மா ஒரு அடையாள சிறுபான்மை அமைச்சர் பதவி கிடைக்கும் அவ்வளவே. முஸ்லிம்களின் வாக்கு எப்போதும் சிதறலானது, ஒட்டுமொத்தமாக அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

  ஆனால் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்க முஸ்லிம்கள் குழந்தைகளைப்பெற்றுக் கொள்வதில் போட்டியில் இறங்குதல் கூடாது நாட்டின் நன்மைக்காக அவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  இவ்வாறு கூறியுள்ளார் குரேஷி.
  Published by:Muthukumar
  First published: