காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மத்திய அரசுக்கு நேரம் கொடுக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம்

காஷ்மீரின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துவருகிறது. இயல்புநிலை திரும்புவதற்கு முன்னர் மிகக் குறைந்த அளவிலேயே சிரமம் இருக்கும்.

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மத்திய அரசுக்கு நேரம் கொடுக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம்
காஷ்மீர்
  • News18
  • Last Updated: August 13, 2019, 4:42 PM IST
  • Share this:
காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கு மத்திய அரசு மேலும் சில காலம் அவகாசம் அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் தெஹ்சீர் பூனவல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ராஸ்டோகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரித்த நீதிபதி மிஸ்ரா, ஜம்மு காஷ்மீரின் நிலையைப் பொறுத்து சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த இந்த நடைமுறைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.


இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேள்வி கேட்ட அருண் மிஸ்ரா, ‘இன்னும் எத்தனை காலத்துக்கு ஊடங்கு உத்தரவு அமலில் இருக்கும்’ என்றார்.

அதற்கு பதிலளித்த வேணுகோபால், ‘காஷ்மீரின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துவருகிறது. இயல்புநிலை திரும்புவதற்கு முன்னர் மிகக் குறைந்த அளவிலேயே சிரமம் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மூன்று மாதத்துக்கு மேல் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 47 பேர் கொல்லப்பட்டனர். எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நீதிபதிகள் களநிலவரங்களை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். களநிலவரத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்த விளக்கத்தைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கு மத்திய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார். நீதிபதிகளின் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேனகா குருசாமி, ‘மேலும் இரண்டு வார காலத்துக்கு இந்த மனுவை நிலுவையில் வைக்க வேண்டும்’ என்று கோரிக்கைவைத்தார்.காஷ்மீரில் 2 வாரங்களில் இயல்புநிலை திரும்புகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்