முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் - அடித்துக் கூறிய பிரசாந்த் கிஷோர்..!!

குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் - அடித்துக் கூறிய பிரசாந்த் கிஷோர்..!!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Prashant Kishor: காங்கிரஸ் கட்சிக்கு முறையான தலைமை தேவை என பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பீகாரில் தனியே அரசியல் களம் காண அவர் முடிவெடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தாண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தன்னை அமைப்பு ரீதியாக பலப்படுத்தவும், வரப்போகும் தேர்தல்களை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடவும் தேவையான யுக்திகளை ஆலோசிக்க கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிற்கு கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கிய நிலையில், இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம் உள்ளிட்ட தேசிய அளவில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்த மாநாடு குறித்து பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியதாவது, 'அன்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் குறித்து என்னிடம் கருத்து தொடர்ந்து கேட்கப்படுகிறது. எனது பார்வையில், இந்த கூட்டத்தில் அர்த்தமுள்ள வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சியின் தலைமை பொறுப்பை முறையாக ஏற்க கால தாமதம் ஆக்கப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த நிலையானது குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச தேர்தல்களில் அக்கட்சி சந்திக்கப்போகும் படுதோல்வி வரை தொடரும்' என்றுள்ளார்.

இதன்மூலம் இரு மாநில தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அது தோல்வியில் முடிந்தது.

இதையும் படிங்க: லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை - புதிய வழக்கு பதிவு..

காங்கிரஸ் கட்சிக்கு முறையான தலைமை தேவை என பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பீகாரில் தனியே அரசியல் களம் காண அவர் முடிவெடுத்துள்ளார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அம்மாநிலம் தழுவிய 3,000 பாத யாத்திரை தொடங்கவுள்ளதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்த பிரசாந்த் கிஷோரை அக்கட்சி தலைவர் நிதிஷ் குமார் 2020ஆம் ஆண்டில் அதிரடியாக நீக்கினார். பிரசாந்த் கிஷோர் தற்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு தேர்தல் வேலை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளார்.

First published:

Tags: Congress party, Indian National Congress, Prashant Kishor