கடற்படை அதிகாரி போல வேடமிட்டு டிக்டாக் பதிவேற்றம் செய்த இளைஞரை கைது செய்த கேரள போலீசார்

கடற்படை அதிகாரி போல வேடமிட்டு டிக்டாக் பதிவேற்றம் செய்த இளைஞரை கைது செய்த கேரள போலீசார்
கடற்படை அதிகாரி போல வேடமிட்டு டிக்டாக் பதிவேற்றாம் செய்த இளைஞர்கைது.
  • Share this:
கேரளா கொச்சியின் கடற்படைத் தளத்திற்கு அருகே இந்திய கடற்படையின் அதிகாரி போல உடையணிந்து நடமாடிய ராஜ்நாத் என்ற இளைஞரை கேரள மாநில போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்காளத்தின் நாடியாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ராஜ்நாத். இவர் கடற்படை சீருடையிலேயே பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். மேலும் ஒரு கடற்படை அதிகாரியாகக் காட்டிக்கொண்டு ‘டிக்டோக்’ வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார்.

Also see:ராஜ்நாத் என்ற நபருக்கு கொச்சியில் உள்ள கடைகளிலிருந்து கடற்படை சீருடைகள் கிடைத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி இவ்வாறு ஆள்மாறாட்டம் செய்துள்ளார். எனவே அவர் மீது ஐபிசி 140வது பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், கடற்படை சீருடைகளையும் பேட்ஜ்களையும் அவரது இல்லத்திலிருந்து மீட்டுள்ளது. பின்னர் கேரளாவில் உள்ள கடைகளில் சேவை துறை அதிகாரிகள் பயன்படுத்தும் உடைகளை சம்பந்தமே இல்லாத நபர்கள் கேட்டால் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading