பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 6, 2018, 7:11 AM IST
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்:  நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி
Web Desk | news18
Updated: December 6, 2018, 7:11 AM IST
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட வேண்டுமென வலியுறுத்தி, இந்து அமைப்புகள் இன்று வெற்றித் தினமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இன்று யாகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்து அமைப்புகளின் நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை முன்னிட்டு அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், புறநகர்களை இணைக்கும் மின்சார ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உடமைகள் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்கள், பார்க்கிங் பகுதி, நுழைவு வாயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தைவிட அதிக போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்காக கூடியுள்ள போலீசார் (கோப்புப் படம்)


விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவிகளுடன் வெண்டிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
Loading...
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுப்பு படை உதவி ஆய்வாளர் ஞான ஆனந்த் தலைமையில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் 2,000 போலீசாரும், புறநகர் பகுதிகளில்  3000 போலீசாரூம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பல்வேறு ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Also See... பாபர் மசூதி இடிக்கபட்ட வரலாறு! வீடியோ
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...