இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் புலிகள்... வெரி குட் பிரிவில் தமிழகத்தின் 4 சரணாலயங்கள்...!

சுமார் 3 ஆயிரம் புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 29, 2019, 10:26 AM IST
இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் புலிகள்... வெரி குட் பிரிவில் தமிழகத்தின் 4 சரணாலயங்கள்...!
வங்கப்புலி (Image: TigerWorld)
Web Desk | news18
Updated: July 29, 2019, 10:26 AM IST
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் நிலை குறித்த அறிக்கையை சர்வதேச புலிகள் தினமான இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

மெடுக்காக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது. ஒரு கப்பல் பறந்து விரிந்த கடலில் வரும் போது அந்த கப்பல் குறித்து அறிந்து கொள்ள அதன் மீது பறக்கும் கொடியே முதல் ஆதாரமாக உள்ளது.


அது போல் ஒரு வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் குறித்து எடுத்துரைப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள இந்த புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-வது ஆண்டில் கடுமையாக சரிந்து 1700-ஆக இருந்தது. இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தன.

அதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த முறை கணக்கெடுப்பில் 2,226-ஆக உயர்ந்தது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும்.

Loading...

இந்த நிலையில், சர்வதேச புலிகள் தினமான இன்று இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் தர மதிப்பீடு ஆகிய தகவல்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பின் படி, 2018-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2967 ஆக உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சுமார் 3 ஆயிரம் புலிகளுடன், உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஆனமலை, களக்காடு - முண்டந்துறை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய 4 சரணாலயங்களும் 82.03 புள்ளிகளுடன் வெரி குட் பிரிவில் இடம்பிடித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்கு விருதும் வழங்கப்பட்டது.கடந்த 2014-ம் ஆண்டு கணெக்கெடுப்பில் 2226 புலிகள் இந்தியாவில் இருந்துள்ளன. இதுவே, 2010-ல் 1706 ஆகவும், 2006-ல் 1411 ஆகவும் இருந்துள்ளன.
First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...