ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி கைது!

news18
Updated: August 22, 2019, 10:44 AM IST
ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி கைது!
துஷார் வெல்லப்பள்ளி
news18
Updated: August 22, 2019, 10:44 AM IST
வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெல்லப்பள்ளி, சுமார் 19.5 கோடி ரூபாய் செக் மோசடி புகாரில் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளரை நிறுத்தாத நிலையில், கூட்டணியில் இருந்த பாரத தர்மா ஜன சேனா என்ற அமைப்பின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளியை நிறுத்தியது.

முதலில் திரிச்சூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துஷார், பின்னர் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டி என்று அறிவிக்கப்பட்டதும் அந்தத் தொகுதிக்கு வேட்பாளராக மாற்றப்பட்டார்.


கேரளாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்திவரும் துஷார் வெல்லப்பள்ளி, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துபாயில் 19.5 கோடி ரூபாய் செக் மோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...