விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 விமானங்கள் மழையால் சேதம் - அதிகாரிகள் வியப்பு!

Indigo, Go First

இண்டிகோ நிறுவன விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் பாதிப்பு ஏற்படுவது புதிதல்ல

  • Share this:
அகமதாபாத் விமான நிலையத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ மற்றும் கோ பர்ஸ்ட் நிறுவனங்களின் 5 விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அகமதாபாத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல், இடியுடன் கூடிய கனமழை கொட்டியுள்ளது. அப்போது அகமதாபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் சேதமடைந்துள்ளன. VT- IVO, VT-ITD மற்றும் VT-IVQ என்ற மூன்று விமானங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உடனடியாக இண்டிகோ நிறுவன தொழில்நுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு, சரிசெய்யத் தொடங்கினர்.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வியாழக்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்களில் சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பார்வையிட்டதாகவும், அனைத்து பயப்படக்கூடிய அளவுக்கான சேதமில்லை எனத் தெரிவித்துள்ளது. அந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்படக் கூடிய அளவில் மட்டுமே இருப்பதால், விரைவில் மூன்று விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சரிசெய்யப்பட்டு பயணத்தை தொடங்கும் எனவும் இண்டிகோ கூறியுள்ளது.

Also Read:   2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

இண்டிகோ நிறுவனத்தின் 3 விமானங்களின் பயணம் முன்னறிவிப்பின்றி ரத்தாகியுள்ளதால், அந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதேபோல், அகமதாபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோ பர்ஸ்ட் (GO FIRST) நிறுவனத்தின் 2 விமானங்களிலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. விமானங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவுக்கு இடி ஏற்படுத்திய தாக்கம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர். கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் இதற்கு முன்பு கோ ஏர் ( Go Air) என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

Also Read:   கர்ப்பிணி ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

இண்டிகோ நிறுவன விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் பாதிப்பு ஏற்படுவது புதிதல்ல. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு சென்ற விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் டயர் ஒன்று வெடித்தது. கண்ணூரில் இருந்து புறப்பட்ட விமானம் திங்கட்கிழமை இரவு 8.03 மணிக்கு ஹூப்ளியில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் டயர் ஒன்று வெடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை. விமானிகளும், பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர். இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்த இண்டிகோ விமானம், ஹூப்ளியில் இண்டிகோ ATR ஆப்பரேடிங் 6e-7979 என்ற விமானத்தின் டயர் வெடித்தது. பயணிகளுக்கும், விமானிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எதனால் சக்கரம் வெடித்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளது.
Published by:Arun
First published: