Home /News /national /

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தால் குற்றம்: நீதிமன்றம் அதிரடி

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தால் குற்றம்: நீதிமன்றம் அதிரடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருமணமான பெண்ணுக்கு வேறொருவர் காதல் கடிதம் கொடுத்து காதல் வலை விரிப்பது அந்தப் பெண்ணின் கண்ணியத்துக்கு இழைக்கும் இழிவு என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.

    திருமணமான பெண்ணுக்கு வேறொருவர் காதல் கடிதம் கொடுத்து காதல் வலை விரிப்பது அந்தப் பெண்ணின் கண்ணியத்துக்கு இழைக்கும் இழிவு என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.

    மும்பை ஹைகோர்ட்டின் நாக்பூர் அமர்வு இத்தகைய அதிரடி தீர்ப்பை வழங்கியதோடு குற்றவாளிக்கு ரூ.90,000 அபராதம் விதித்ததோடு இத்தகைய பொக்கு பொறுத்துக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளது.

    ஸ்ரீகிருஷ்ண தவாரி என்பவருக்கு எதிராக தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றம் அவரை கடுமையாகக் கண்டித்து ரூ.90,000 அபராதத்தில் ரூ.85,000 அந்தப் பெண்ணுக்கு இழப்பீடாகக் கொடுக்க உத்தரவிட்டது.

    பெண்ணின் கண்ணியம் என்பது விலை மதிப்பில்லா நகை போன்றது என்று கூறிய கோர்ட் அது இழிவு படுத்தப்படக் கூடாது என்றது.

    “புகார் அளித்த பெண்ணுக்கு வயது 45. இந்தப் பெண்ணுக்கு கவிதை ரசம் சொட்டச் சொட்ட தூய மொழியில் காதல் கடிதம் கொடுத்திருந்தாலும், கவிதைகளாக வடித்திருந்தாலும் அந்தப் பெண்ணின், பெண்மையின் கண்ணியத்துக்கு ஏற்படுத்தும் இழுக்குதான் இந்தச் செயல்.

    எனவே புகார்தாரர் இது தொடர்பாக தன் பெண்மைக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டது என்று கருதியது சரியே. மேலும் குற்றவாளி இவரை நோக்கி அசிங்கமான செய்கைகளையும், உதடுகளைக் குவித்து செய்கை செய்வதும் சில வேளைகளில் இந்தப் பெண் மீது கூழாங்கற்களை எறிந்து எரிச்சல் ஏற்படுத்தியதும் கண்டிக்கத்தக்கது.” என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நடந்தது என்ன? எப்போது நடந்தது?

    அக்டோபர் 3, 2011-ல் மளிகை கடை முதலாளி ஒருவர் இந்தப் பெண் பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்கும்போது காதல் கடிதம் கொடுத்து ஐ லவ் யு என்று கூறியுள்ளார். இவர் ஏற்கவில்லை என்றவுடன் மறுநாள் இவரை நோக்கி ஆபாசமாக செய்கைகளைச் செய்து காட்டி, காதல் கடிதத்தில் எழுதியிருப்பதை வெளியே காட்டாதே என்று எச்சரித்துள்ளார்.

    இதனையடுத்து புகார் அளிக்கப்பட ஸ்ரீகிருஷ்ண தவாரிக்கு 2 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை விதித்தது அமர்வு நீதிமன்றம். இது 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பாகும். மேலும் ரூ35,000 இழப்பீடு உட்பட ரூ.40,000 அபராதம் விதித்தது.

    இதனை மேல்முறையீடு செய்த தவாரி அந்தப் பெண் தன் மளிகைக் கடையில் சாமான்களை கடனாக வாங்கிக் கொண்டு காசு தரவில்லை இதனால் அதை கேட்டவுடன் தன் மீது பாலியல் புகார் கூறுகிறார் என்று மேல் முறையீடு செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி இவர் திருந்துவதற்கு வாய்ப்பளித்து பிரிவு 506-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது, ஆனால் அபராதத் தொகை ரூ90,000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Court, Love

    அடுத்த செய்தி