ம.பி.யில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. 100 கோடி ரூபாய் பேரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வியை சிவராஜ்சிங் சவுகானால் ஜீரணிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் தெரிவித்தார்.

news18
Updated: January 9, 2019, 5:27 PM IST
ம.பி.யில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. 100 கோடி ரூபாய் பேரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
திக் விஜய்சிங்
news18
Updated: January 9, 2019, 5:27 PM IST
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. 100 கோடி ரூபாய் வரை தருவதற்கு பேரம் பேசுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளும், பா.ஜ.க 109 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்துள்ளது. கமல்நாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில், போபாலில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஜ்நாத் குஷ்வாகாவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாராயன்  திரிபாதி உணவகத்துக்கு அழைத்து சென்று பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா, விஸ்வாஸ் சாரங் ஆகியோரும் இருந்துள்ளனர். மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு 100 கோடி ரூபாய் தருவதாக குஷ்வாகாவிடம் அவர்கள் பேரம் பேசியுள்ளனர். மேலும் புதிதாக பா.ஜ.க. அரசு அமைந்தால் அமைச்சர் பதவி அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், குஷ்வாகா அதற்கு மறுத்துவிட்டார். மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்வியை சிவராஜ்சிங் சவுகானால் ஜீரணிக்க முடியவில்லை என்று திக் விஜய்சிங்  தெரிவித்தார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்துள்ளது. ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
Loading...
Also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...