• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாட்டி வீட்டுக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: வீட்டருகே விளையாடிய சிறுமி சடலமாக மீட்பு.. கோரமான கொலை சம்பவம்!

பாட்டி வீட்டுக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: வீட்டருகே விளையாடிய சிறுமி சடலமாக மீட்பு.. கோரமான கொலை சம்பவம்!

மாதிரி படம்.

மாதிரி படம்.

சிறுமியின் உடலில் துணி அரைகுறையாகவும், அவரின் கழுத்து அறுக்கப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும், முடி அறுக்கப்பட்டும் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறினர்.

  • Share this:
கொல்கத்தாவில் பாட்டி வீட்டுக்கு சென்ற 8 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சோவபசார் பகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி மேற்கு கொல்கத்தாவின் ஜோராபகான் பகுதியில் தனது மாமா வீட்டில் வசிக்கும் பாட்டியை பார்ப்பதற்காக தனது பதின் பருவ சகோதரியுடன் சென்றுள்ளார்.

கடந்த புதனன்று மாலை 7.45 மணியளவில் மாமா வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுமியை 8 மணியளவில் காணாததால் அவரை அக்கம்பக்கத்தில் அவரின் உறவினர்கள் தேடியுள்ளனர். இதனிடையே சிறுமி காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் 24 மணி நேரத்திற்கு பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும் எனவும் இருப்பினும் தாங்கள் சிறுமியை தேடுவதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டதாக உறவினர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே சிறுமியின் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சிறுமி சடலமாக கிடப்பதாக அப்பகுதிவாசி ஒருவர் கூறியதால் அங்கு சென்று பார்த்துள்ளனர். சிறுமியின் உடலில் துணி அரைகுறையாகவும், அவரின் கழுத்து அறுக்கப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும், முடி அறுக்கப்பட்டும் மிகவும் கோரமாக அவர் கொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறினர். இதற்கிடையே நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாக அப்பகுதிவாசிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் உடனடியாக செயல்படாமல் காலம் தாழ்த்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

சிறுமியின் கோர கொலை குறித்து கூறிய விசாரணை அதிகாரி ஒருவர், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தான் இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும். மரணத்திற்கு முன்னர் அவர் கடுமையாக வேதனைகளை அனுபவித்திருப்பது கிடைத்துள்ள சூழ்நிலை ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. ஒருவரால் அல்லது கும்பலால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம். கொலை செய்த நபர் இதே பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம், அவருக்கு இந்த பகுதியை குறித்த புரிதல் இருப்பதாக உணர்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இக்கொலை குறித்த மேலும் தகவல்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

புதன் கிழமையன்று சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த மேலும் 2 சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் தான் அங்கு வந்தேன். பார்த்த உடனேயே எல்லாம் முடிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். என் மகளுக்கு இனி நீதி மட்டுமே தேவை என சிறுமியின் தந்தை கூறியது கலங்கச் செய்வதாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: