முப்பது மொபைல் போன் செயலிகள் மூலம் பல நூறு கோடி ரூபாய் பெறுமான நூதன கடன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இத்தகைய பயங்கர மோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 பேரில் அமெரிக்க பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்ற பொறியாளரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் இந்த மோசடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்துள்ளன. குர்கவானிலும் ஹைதராபாத்திலும் இவர்களுக்கு தடபுடலான கால்செண்டர்களும் உண்டு.
இந்நிலையில் இந்த கும்பலை வேட்டையாடிய ஹைதராபாத் போலீசார் இந்தக் கும்பல் தொடர்பான 75 வங்கிக் கணக்குகள், ரூ.423 கோடி தொகை ஆகியவற்றை முடக்கினர். இந்தக் கடன் செயலிகளுக்கு ஆர்பிஐ அனுமதி அளிக்கவில்லை. இவர்கள் தங்கள் இடம் கடன் வாங்குவோர் தலையில் 35% வட்டியை சுமத்தியுள்ளனர்.
இவர்களது அநியாய வட்டி, கெடுபிடிகளை, நெருக்கடிகளை, தொல்லைகளைத் தாங்க முடியாமல் 3 பேர் தற்கொலை செய்து கொண்டதும் இது குறித்த ரகசிய விசாரணைகளுக்கு வித்திட்டது. இதனையடுத்து தெலங்கானா போலீஸார் ஹைதராபாத், குர்கவானில் அதிரடி சோதனைகள் நடத்தி 16 பேரைக் கைது செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
32 வயது மதிக்கத்தக்க சரத் சந்திரா என்ற நபர் ஆனியன் கிரெடிட் மற்றும் கிரெட் ஃபாக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற இரண்டு நிறுவனங்களின் பேரிலும் கடன்களை அளித்து வந்தார். பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் விண்ணப்பங்களையும் விற்றுக் கொண்டிருந்தார்.
இவர்கள் நடத்திய கால்செண்டர்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர், இவர்கள் வாடிக்கையாளர்களிடம் நைச்சியமாகப் பேசி அழைத்துவரப் பணிக்கப்பட்டனர். கால்சென்டர்களில் பணியாற்றும் இவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு ரூ.10,000 முதல் 15,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு டிஜிட்டல் ஏமாற்று வித்தைகள் மூலம் இந்த கடன் மோசடி நடவடிக்கைகள் நடைபெற்று வந்ததும் சைபர் விசாரணையில் தெரியவந்தது.
புதன்கிழமையன்று இத்தகைய ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப், நிறுவனங்களை நம்பி மோசம் போக வேண்டாம் என்று ஆர்பிஐ எச்சரித்தது.
இது தொடர்பாக ஆர்பிஐ கூறும்போது, “இத்தகைய டிஜிட்டல் ஆப்கள், நிறுவனங்கள் கடனுக்கு அளவுக்கதிக வட்டி வசூலிக்கின்றன. இது போக மறைமுகக் கட்டணங்களையும் விதிக்கின்றன. கடன் தொகையை வசூல் செய்வதிலும் பாரதூரமான மோசமான முறைகளைக் கையாள்கின்றன. கடன் வாங்குவோர்களின் மொபைல் போன் தரவுகளை துஷ்பிரயோகம் செய்வதற்காகப் பயன்படுத்துகின்றனர்” என்று எச்சரித்துள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.