Home /News /national /

பிளைட்டில் வந்து கொள்ளை.. கொச்சியை அதிரவைத்த வடமாநில கொள்ளையர்கள் கைது - தீவிர விசாரணையில் போலீஸ்

பிளைட்டில் வந்து கொள்ளை.. கொச்சியை அதிரவைத்த வடமாநில கொள்ளையர்கள் கைது - தீவிர விசாரணையில் போலீஸ்

வடமாநில கொள்ளையர்கள் கைது

வடமாநில கொள்ளையர்கள் கைது

கொள்ளையர்கள் கும்பலில் மேலும் எத்தனை பேர் உள்ளது எந்தெந்த மாநிலங்களில் இதே போல கொள்ளை அரங்கேற்றப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
விமானத்தில் வந்து ஆடம்பர சொகுசு வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் குமபலை சேர்ந்த மூன்று வட மாநில கொள்ளையர்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் கொச்சியில்  போலீசாரால் கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் விமானத்தில் கொச்சி வந்தனர். மேலும் மூன்று நாட்கள் நகரில் பூட்டியிருந்த ஆறு சொகுசு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டனர் . கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கேரளாவை விட்டு வெளியேறும் முன் குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கினர். நகரின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  10 கிலோ மீட்டர் சுற்றளவில் குற்றவாளிகள் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

வேலை நேரம் மற்றும் அதிகார வரம்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கொச்சியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் உள்ள போலீசார் உட்பட்ட தனிப்படை  நடத்திய தீவிர விசாரணையில்உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் சிம்லா பகதூரைச் சேர்ந்த மின்டு விஸ்வாஸ் (47), உத்தரபிரதேச மாநிலம் ஜீப்பூர் பகுதியை சேர்ந்த ஹரிசந்திரா (33), உத்தரபிரதேச மாநிலம் குட்பூர்  அமாவதி பகுதியை சேர்ந்த சந்திரபான் (38) ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.

Also Read: மூதாட்டி கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணீ காட்டிய நபர்.. ஜாமீன் கிடைத்தும் சிறைவாசம்.. கைது செய்த போலீஸ்

70,000 ரூபாய், நான்கு செல்போன்கள், 1.5 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள், மற்றும் 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. அனைத்து கொள்ளை சம்பவங்களும் ஒரே போல் பின் பற்றி வந்ததால் ஒரே கும்பல் தான் இதன் பின்னணியில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

எளமக்கரை கீர்த்தி நகரில் திருட்டு நடந்த வீட்டின் அருகே குடியிருப்போர் சங்கத்தினர் அமைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இவர்களின் அடையாளங்கள், தோற்றங்களை ஆதாரமாக கொண்டு கொச்சி  நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள போலீசார் அடங்கிய  சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

Also read... பள்ளி மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய சகோதரிகள் - போக்சோ சட்டத்தில் கைது

தொடர்ந்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கும் இடங்களிலும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள முக்கிய ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் இந்த தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். நகரத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

இதனை தொடர்ந்து ஒரு சைவ உணவகத்திற்கு அருகில் கொள்ளையர்கள்  நடந்து செல்வது தெரிந்தது. போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். இந்த கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தில் நீண்ட நேரங்களில் பயன்படுத்தி வந்த ஒரு செல் எண்ணை போலீசார் கண்காணித்து நடத்திய விசாரணையில்  ​​கடந்த 21-ம் தேதி மாலை டெல்லியில் இருந்த இந்த மொபைல் எண் 4 மணி நேரத்திற்குப் பிறகு கொச்சியில் உள்ள செல்போன் டவரின் எல்லையை அடைந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் விமானம் மூலம் வந்ததும்  கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த கொள்ளையர்கள் கும்பலில் மேலும் எத்தனை பேர் உள்ளது எந்தெந்த மாநிலங்களில் இதே போல கொள்ளை அரங்கேற்றப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Kerala, Theft

அடுத்த செய்தி