• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி

பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி

பசுமாடு

பசுமாடு

பசுமாட்டை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், மாடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மூன்று மாதம் கருவுற்றிருந்த பசுமாடு சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டம் பிதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி நமா புசிசாராஜூ. அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பசு மாடு காணாமல் போனது என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார். காவல்துறை, தேடுதலில் அந்தப் பசுமாடு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாடு ஒரு மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது.

    மாட்டின் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், பசுமாட்டை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், மாடு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தினார். இந்தச் செய்தி, ஊர் முழுவதும் பரவியதையடுத்து, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக காவல்துறையினர் அளித்த உறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹரியானா மாநிலத்தில் கருவுற்றிருந்த ஆட்டை எட்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அந்த ஆடு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: