ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல் - 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல் - 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்

2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் மாவட்டம் புல்வாமா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியதாவது, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதில் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதேபோல், தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. இதில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த பயங்கரவாதிகளில் ஒருவரான ஜுனைத், ஜம்மு காஷ்மீர் காவலரை கொன்ற குற்றத்திற்காக தேடப்பட்டு வந்தவராவார். இவர்களிடம் இருந்து ஆயுதங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பிரபல ஆடை வடிவமைப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை மோசமடைந்து பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.பயங்கரவாத தாக்குதலால் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாக அரங்கேறிவருகிறது. அதேவேளை ராணுவம், சிஆர்பிஎப், காவல்துறை ஆகிய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

First published:

Tags: Jammu and Kashmir, Terrorists