ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதையலுக்காக மூன்று பேர் நரபலி! ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்

புதையலுக்காக மூன்று பேர் நரபலி! ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

போலீசார் நடத்திய விசாரணையில் சிவன் கோவிலில் உள்ள லிங்கத்திற்கு மனித ரத்தத்தால் அபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திராவில் பழமையான சிவன் கோவில் அருகே இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். புதையலுக்காக அவர்கள் மூவரும் நரபலி கொடுக்கப்பட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தின் தானக்கல்லு மண்டலத்தில் உள்ளது கொர்ட்டிகோட்டா கிராமம். இந்தக் கிராமத்தின் வனப்பகுதியில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. மிக பழமையான அந்தக் கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் சிவன் கோவில் அருகே இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  தகவலறிந்து சென்ற தானக்கல்லு போலீசார் மூன்று பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சிவன் கோவிலில் உள்ள லிங்கத்திற்கு மனித ரத்தத்தால் அபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

  பழமையான கொர்ட்டிகோட்டா சிவன் கோவிலில் புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. புதையலை எடுப்பதற்காக மூவரையும் நரபலி கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்த மூன்று பேரும் அதே பகுதியை சேர்ந்த ஹனுமம்மா, சத்யலட்சுமி, சிவராம் ரெட்டி என்று தெரியவந்துள்ளது. கோவில் கட்டுமானப் பணிகளில் இருந்த அவர்கள், வேலை முடிந்த பின் படுத்து தூங்கியபோது கொலை நடந்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Murder