பஞ்சாப் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் 3 பேர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கிர்தார்பூர் சாஹிப் மாவட்டத்தில் லோஹாந்த் என்ற ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலும் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் 4 பேர் விளையாடவும் சாப்பிடவும் ரயில்வே பலத்தின் அருகே வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 7 முதல் 11 வயதை ஒட்டியவர்கள் ஆவர். அங்குள்ள மரத்தில் பெர்ரி பழம் பறித்து சிறுவர்கள் சாப்பிட்டு வந்த நிலையில், அந்த ரயில் வழித்தடத்தில் சஹ்ரான்பூரில் இருந்து இமாச்சல் பிரதேசம் செல்லும் பாசஞ்சர் ரயில் வந்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு ரயில் வந்தது தெரியவில்லை. ஆர்வத்துடன் சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்த 4 சிறார்களின் மீது ரயில் மோதியது. இதில் 3 சிறுவர்கள் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிறுவன் பலத்த காயங்களுடன் அருகே உள்ள அனந்த்பூர் சாஹிப் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் இரங்கல் தெரிவித்து, விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான அம்ரீந்தர் சிங், தனது இரங்கல் செய்தியுடன் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Kirtarpur Sahib, Punjab | Three children dead, one injured in a train accident
2 children died on spot. One died on way to hospital. 4th one is being treated. Children had come here to eat berries off trees & did not realise a train was approaching them: ASI GRP, Jagjit Singh pic.twitter.com/SWZQQ0f2bu
— ANI (@ANI) November 27, 2022
ரயில் மோதி 3 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Punjab, Punjab Train Accident, Railway, Train Accident