இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் குறித்து சுஸ்மா சுவராஜ் தகவல்!

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. அதில், 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது.

news18
Updated: April 21, 2019, 8:56 PM IST
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் குறித்து சுஸ்மா சுவராஜ் தகவல்!
இலங்கை குண்டுவெடிப்பு
news18
Updated: April 21, 2019, 8:56 PM IST
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் மூன்று இந்தியர்களும் அடக்கம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது.

மீண்டும், 3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

அதில், 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த வெளிநாட்டினர், இந்தியா, அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மோரக்கோ, வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Loading...


உயிரிழந்த இந்தியர்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகம், உயிரிழந்த இந்தியர்கள் குறித்து தெரிவித்துள்ளது. லோகாஷினி, நாராயன் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...