ஹோம் /நியூஸ் /இந்தியா /

Working From Road... வேலை செய்துகொண்டே மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த நண்பர்கள்..

Working From Road... வேலை செய்துகொண்டே மும்பையிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பயணித்த நண்பர்கள்..

வெவ்வேறு வாழ்க்கை முறைகளை வெவ்வேறு இடத்திலும் தாங்கள் அனுபவிப்பதாக ரித்தேஷ் கூறினார். அவர்களின் பயணத்தின் சிறந்த பகுதியாக இதைக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வெவ்வேறு வாழ்க்கை முறைகளை வெவ்வேறு இடத்திலும் தாங்கள் அனுபவிப்பதாக ரித்தேஷ் கூறினார். அவர்களின் பயணத்தின் சிறந்த பகுதியாக இதைக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வெவ்வேறு வாழ்க்கை முறைகளை வெவ்வேறு இடத்திலும் தாங்கள் அனுபவிப்பதாக ரித்தேஷ் கூறினார். அவர்களின் பயணத்தின் சிறந்த பகுதியாக இதைக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நண்பர்களுடன் ஒரு லாங் டிரிப் செல்ல வேண்டும் என்று சிலர் கனவு காண்பது உண்டு, அதற்காக செய்துகொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுமுறை எடுக்க முடியாது அல்லவா? கோவிட் -19 நெருக்கடியின்போது  பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சும்மா கிடக்கும் தொற்றுநோயை எடுத்து நம் பாக்கட்டில் போடுவதை போலாகும். இதனால் பலர் தங்களின் அனிமூன், டூர் உள்ளிட்ட பல ட்ரிப்புகளையும் கேன்சல் செய்துள்ளனர். இருப்பினும், இந்த காரணிகளால் மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு மூன்று நண்பர்கள் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். 

இது மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூவரும் தங்கள் பயணம் முழுவதும் சாலையில் தங்கியபடியே வேலை (Working From Road) செய்து வந்துள்ளனர். பாக்கன் ஜார்ஜ், ஆல்வின் ஜோசப் மற்றும் ரதீஷ் பலேராவ் (Bakcen George, Allwyn Joseph and Ratish Bhalerao) ஆகிய மூவரும் வீட்டிலிருந்து வேலை செய்வதை கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளனர். கொரோனா தொற்றுநோயின் போது மூவரும் ஆபிஸ் வேலையை சைக்கிள் பயணம் செய்தபடி சாலைகளில் தங்கி செய்துள்ளனர்.  கொரோனா தொற்று நேரத்தில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும் இவர்கள் அதை கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) தெரிவித்துள்ளது

31 வயதான ஜார்ஜ்-க்கு இந்த யோசனை நவம்பர் மாதத்தில் வந்துள்ளது. ஆரம்பத்தில், அவர் மட்டுமே பயணத்தை தொடர ஆர்வமாக இருந்தார். பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அவரது நண்பர்களான ஆல்வின் மற்றும் ரதிஷ் ஆகியோரும் இதில் சேர்ந்து கொண்டனர். இந்த மூவரும் ஒரு மாதத்தில் சுமார் இரு மாநிலங்களுக்கிடையில் 1,687 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்தனர். இதனால் இந்த பயணம் ஜார்ஜ்-க்கு மூன்றாவது நீண்ட தூர பயணமாக மாறியது. பயணத்தின் போது கூட, இந்த மூவர் உள்ளூர் சாலையோர உணவகங்களில் சைக்கிளை நிறுத்தி, தற்காலிக பணிநிலையங்களைப் (workstations) ஏற்படுத்தி தங்கள் ஆபிஸ் வேலையை தொடர்ந்தனர்

இந்த சைக்கிள் பயணம் குறித்து ஜார்ஜ் பேசும்போது, "இந்த சைக்கிள் பயணம் சவாலானது என்றாலும், மதிப்புக்குரியது . சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு சுதந்திர உணர்வையும் மகிழ்ச்சியையும் தருகிறது, இதை நாங்கள் ஒரு வேலையாக உணரவில்லை” என்று அவர் கூறினார். அலுவலக வேலைக்காக சுமந்து வந்த கேட்ஜெட்டுகள் சைக்ளிங் செய்யும்போது எடையைச் சேர்த்ததால் கொஞ்சம் சிரமத்தை அனுபவித்ததாக தெரிவித்தனர் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு சைக்கிள் ஓட்டத் தொடங்குவதோடு, பொதுவாக ஏதேனும் ஒரு இடத்தில் காலை 11 மணிக்கு ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஆல்வின் பேசும்போது, முதல் இரண்டு நாட்கள் கடினமாக இருந்ததாகவும், ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் வழக்கமான பழக்கமாக நடவடிக்கைகள் மாறத் தொடங்கியதாகவும் கூறினார். சராசரியாக, அவர்கள் தினமும் 80 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினர் என்றும் வார இறுதி நாள்களில் ட்ரிப்கள் மிகவும் நீண்டதாக இருந்தன என்றும் அவர்கள் கூறினர். கொரோனா தொற்றுநோய் காரணமாக சில இடங்களில் தங்குமிட வசதிகள் இல்லாததால் அவர்கள் பயணத்தின் போது சில சிரமங்களை எதிர்கொண்டதாகவும் இதைத்தவிர்த்து வேறு எந்த பெரிய பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தனர். 

இந்த ட்ரிப்பிற்கு மட்டும் மூவருக்கும் தலா ரூ .25,000 செலவானதாக கூறியுள்ளனர். மூவரின் ஆபிஸிலும் உள்ள மேனஜர்களும் அவர்களின் சாகச பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளித்தனர், இருப்பினும், வேலை பாதிக்கப்படக்கூடாது என்பதில் மூன்று நண்பர்களும் தெளிவாக இருந்தனர்வெவ்வேறு வாழ்க்கை முறைகளை வெவ்வேறு இடத்திலும் தாங்கள் அனுபவிப்பதாக ரித்தேஷ் கூறினார். அவர்களின் பயணத்தின் சிறந்த பகுதியாக இதைக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Ram Sankar
First published:

Tags: Cycling, Journey, Trip, Work From Home, Work from road