முகப்பு /செய்தி /இந்தியா / விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எத்தனை எம்.பிக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்?

விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எத்தனை எம்.பிக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்?

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

30 எம்.பிக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா இல்லையா என்ற விவரம் கிடைக்கவில்லை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது. இக்கூட்டம் பாதுகாப்பாக நடைபெற எம்.பிக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

மாநிலங்களவை செயலக தகவல்களின்படி ஜூன் 18ம் தேதி நிலவரப்படி, குறைந்தது 179 எம்.பிக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 232 உறுப்பினர்களில் 77% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல மேலும் 39 எம்.பிக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மாநிலங்களவை செயலக தகவல்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

Also Read:  உணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்!

மக்களவையை பொறுத்தவரையில் இதுவரை 403 எம்.பிக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மொத்தம் உள்ள 540 மக்களவை எம்.பிக்களில் நான்கில் மூன்று பங்கினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருகின்றனர்.

Also Read:   போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஆசாமி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து உறுப்பினர்களும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பராமரித்து கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது முக்கால்வாசிப்பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்கள் போல அல்லாமல் தற்போதைய மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாராளுமன்ற செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே முதல் டோஸ் எடுத்துக் கொண்ட சில எம்.பிக்கள் இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது டோஸை தற்போதைக்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை எனவும், மேலும் 30 எம்.பிக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா இல்லையா என்ற விவரம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுப்பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Monsoon, Parliament