பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வைத்திருந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் 3 பேரை உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கைது செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை எளிதானது போலவே இணையம் சார்ந்த மோசடிகளும் பல்கி பெருகி வருகிறது. குறிப்பாக இணைய மோசடி செய்வதற்கென பிரத்தியேக நெட்வொர்க்களை உருவாக்கி சர்வதேச அளவில் மோசடி கும்பல்கள் இயங்கி வருகின்றன.
அப்படி ஒரு வெளிநாட்டு மோசடி கும்பலை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் இந்த மோசடி நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இவருக்கு கேன்சர் நோய் உள்ள நிலையில், இந்த நோய்க்கு இயற்கை ஆயுர்வேத முறையில் மருந்துகளை தருகிறோம் என்று ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பணம் பறித்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த மோசடி குறித்து நொய்டா காவல்துறையிடம் ராணுவ அதிகாரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவர், கானா நாட்டை சேர்ந்த ஒரு நபரை காவல்துறை கைது செய்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிக்குரிய பின்னணி வெளிவந்துள்ளது. இவர்கள் இணையத்தில் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் நிவாரணம் தர முடியாது - பீகார் முதல்வர் திட்டவட்டம்
மேலும், பல போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை தயாரித்து வைத்துள்ளனர். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரிலும் இவர்கள் போலி பாஸ்போர்ட்டை உருவாக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து 6 மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரின்டர்கள் போன்ற கருவிகளையும், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணங்களையும் கவால்துறை பரிமுதல் செய்துள்ளது. மேலும், ரூ.10.76 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் இவர்களிடம் இருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aishwarya Rai, Crime News, Cyber crime, Cyber fraud, Online Frauds, Passport