Home /News /national /

அசாமில் கடும் மழை வெள்ளம் - ஆறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின

அசாமில் கடும் மழை வெள்ளம் - ஆறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின

அசாமில் மழை வெள்ள பாதிப்பு

அசாமில் மழை வெள்ள பாதிப்பு

Assam Floods - வெள்ள பாதிப்பை சமாளித்து, மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள அசாம் மாநில அரசுக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.125 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் இந்தாண்டின் முதல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோபிலி நதியின் நீர் அளவு வெள்ள அபாயத்தை தாண்டியுள்ளது.

    அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், காம்ரூப், நாகோவன், கர்பி அங்லாக், ஹோஜாய், தீமாஜி, சச்சார் ஆகிய ஆறு மாவட்டங்களின் 94 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன இதன் காரணமாக சுமார் 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,732.72 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    குறிப்பாக சச்சார் மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அங்கு ராணுவம், துணை ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 2,150 மக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். ஹோஜாய்,லக்கிம்பூர், நகோவான் ஆகிய மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், கால்வாய்கள் சேதமடைந்துள்ளன.


    இந்த வெள்ள பாதிப்பில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பை சமாளித்து, மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள அசாம் மாநில அரசுக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.125 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதையும் படிங்க: செய்யும் தொழில் போல மனசு சுத்தம் - பணம், நகையுடன் இருந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் 

    வட கிழக்கு மாநிலங்கள் கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், நாட்டின் வடக்கு மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பந்தா பகுதிகளில் அதிகபட்சமாக 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam, Flood, Flood warning

    அடுத்த செய்தி