கிர் காட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்த 11 சிங்கங்கள்!

கிர் காட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்த 11 சிங்கங்கள்!
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: September 20, 2018, 7:21 PM IST
  • Share this:
குஜாராத்தின் கிர் காடுகளில் 11 ஆசிய சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

குஜராத்தின் கிர் காடுகளில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கிர் வனப்பகுதியில் 11 ஆசியச் சிங்கங்கள் இறந்து கிடப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை கிர் வனத்துறை அதிகாரிகள் நியூஸ் 18-க்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.


மேலும், வேறு ஏதும் சிங்கங்கள் இறந்திருக்கின்றனவா என்று விசாரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த 11 சிங்கங்களுக்கும் ஒரு வயது 7 வயது வரை இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த சிங்கங்களும் உடல்கள் அழுகிய நிலையில் உள்ளதால், அவை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: September 20, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading