ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

காஷ்மீர் பனிச்சரிவு

காஷ்மீர் பனிச்சரிவு

கட்டுபாட்டுகோட்டு பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

பனிக்காலம் உச்சத்தில் இருக்கும் நவம்பர், டிசம்பர் காலத்தில் இமயமலை பகுதியில் பனிப்பொழிவுகளும் பனிச்சரிவு நிகழ்வுகளும் நடப்பது இயல்பு. இதனால் மலையேற்ற வீரர்கள், சாகச பயணிகளுக்கு தடை விதிப்பது உண்டு.

ஆனால் பனிப்பிரதேசத்தில் எல்லையை காக்கும் ராணுவ வீரர்கள் அந்த கடும் குளிரிலும் பனிச்சரிவிலும் பாதுகாப்பு  வேலை செய்து வருகின்றனர். அப்படியே சூழலில் ஏற்படும் பாதிப்புகளில்  ராணுவ வீரர்கள் சிக்கி கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நிகழும். அப்படி ஒரு சம்பவம் நேற்று காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவும் பனி சறுக்குகளும் ஏற்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் கட்டுபாட்டுகோட்டு பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட மாச்சில் செக்டாரில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ட்விட்டரில் இருந்து வெளியேறியவரா நீங்க...வாங்க வேலை இங்க தரோம்... "கூ"வின் புது யுக்தி!

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த 3 வீரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் விவரம் குறித்து இன்னும் தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து குப்வாரா மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனிச்சரிவு ஏற்பட்டதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தது மாச்சில் செக்டாரில் ராணுவத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Army man, Kashmir, Snowfall