Home /News /national /

ஆபரேஷன் விடியல்: Cocaine போதை பொருள் கடத்தலில் சிக்கிய ஆப்பிரிக்கர்கள்

ஆபரேஷன் விடியல்: Cocaine போதை பொருள் கடத்தலில் சிக்கிய ஆப்பிரிக்கர்கள்

புதுச்சேரியில் ஆப்பிரிக்கர்கள் கைது

புதுச்சேரியில் ஆப்பிரிக்கர்கள் கைது

Puducherry Operation Vidiyal: புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் கொரியர் மூலம் கொகைனை கடத்தி விற்பனை செய்து வந்த ஆப்பரிக்கர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர்.

புதுச்சேரியில் ’ஆபரேஷன் விடியல்’ என்ற பெயரில் போலீசார் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து வெளிநாட்டை சேர்ந்த சிலர் ரகசியமாக பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரகசியமாக கண்காணித்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்பனையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஈடுபடுவதைக் கண்டுபிடித்தனர்.

அதிரடியாக சோதனை செய்ததில் கொகைன் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 சிறிய பாக்கெட்டுகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோகைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டை சேர்ந்த ஜஸ்டின் டெல்வின், சூடான் நாட்டை சேர்ந்த எலிசா என்ற பெண், கென்யாவை சேர்ந்த பிரான்சிஸ் என்பது தெரிய வந்தது.

சூடான் நாட்டை சேர்ந்த எலிசா என்ற பெண் ஆரோவில்லில் தங்கி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். மற்ற இரு இளைஞர்களும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து வருகின்றனர்.

படிப்பு என்ற போர்வையில் இந்தியாவிற்குள் வரும் இவர்கள் போதை, மது, மாது என கொண்டாட்டமாக இருந்துள்ளனர். இதற்கான பணத்தை போதை பொருட்களை விற்று சம்பாதித்து வந்துள்ளனர்.

Also read... காதலித்ததால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தை.. ஆபத்தான நிலையில் மகளுக்கு சிகிச்சை..

இவர்களை போல மேலும் பலரும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையில் இவர்களுக்கு டெல்லியில் இருந்து கூரியர் மூலம் போதை பொருள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியிலிருந்து கொகைன் (Cocaine) சப்ளை செய்வது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி