Live Update: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ராஜினாமா செய்வேன்! கர்நாடகா சபாநாயகர் எச்சரிக்கை

இன்று மாலை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பெரும்பான்மையை நிருபிப்பதற்கு மேலும் இரண்டு நாள்கள் குமாரசாமி அவகாசம் கேட்டார்.

Live Update: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ராஜினாமா செய்வேன்! கர்நாடகா சபாநாயகர் எச்சரிக்கை
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்
  • News18
  • Last Updated: July 22, 2019, 9:10 PM IST
  • Share this:
நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றைக்குள் நடத்தப்படாவிட்டால் நான் ராஜினாமா செய்வேன் என்று கர்நாடகா மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் அரசைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. ஆனால், குமாராசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்திவருகிறார்.

இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். ஆனால், இன்று மாலை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பெரும்பான்மையை நிருபிப்பதற்கு மேலும் இரண்டு நாள்கள் குமாரசாமி அவகாசம் கேட்டார். ஆனால், இரண்டு நாள்கள் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.


இன்றே, பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனையடுத்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால் நான் ராஜினாமா செய்வேன். நீங்கள், எவ்வளவுதான் கூச்சலிட்டாலும் நான் அவையை ஒத்திவைக்கமாட்டேன்’ என்று ரமேஷ் குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Also see:

First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading