Home /News /national /

முகேஷ் அம்பானிக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல்

முகேஷ் அம்பானிக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல்

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

தான் ஒரு தீவிரவாதி எனக் கூறிய அந்த நபர்,  முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு  இன்று காலை மர்ம நபர் ஒருவர்  தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, தான் ஒரு தீவிரவாதி எனக் கூறிய அந்த நபர்,  முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக  ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனை அதிகாரிகள் டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதில், மொத்தம் 8 அழைப்புகள் வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



    "மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு புகார் வந்து, அதை சரிபார்த்து வருகிறோம்.மருத்துவமனையின் காட்சி எண்ணில் அழைப்பு வந்ததாகத் தெரிகிறது” என்று மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நண்பகல் தெரிவித்தார். மேலும், இந்தபுகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mukesh ambani, Reliance, Threat

    அடுத்த செய்தி