ஹோம் /நியூஸ் /இந்தியா /

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதித்திட்டம்.. பாஜக தலைவரை கைது செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை!

கெஜ்ரிவாலை கொலை செய்ய சதித்திட்டம்.. பாஜக தலைவரை கைது செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் மனிஷ் சிசிசோடியா

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் மனிஷ் சிசிசோடியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், சதித் திட்டம் தீட்டிய பாஜக தலைவர் மனோஜ் திவாரியை கைது செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லியின் முதலமைச்சராகவும் இருப்பவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி பகிர் புகார் தெரிவித்துள்ளது.குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான பரப்புரை தற்போது சூடு பிடித்துள்ளது.

  குஜராத்திலும், டெல்லியிலும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு பாஜகவை அசைத்து பார்க்க ஆம் ஆத்மி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆம் ஆத்மி ஆட்சி உள்ள நிலையில், அங்கு மாநகராட்சியை கைப்பற்ற பாஜக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜக கட்சியின் முன்னணி பிரமுகர் மனோஜ் திவாரி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பதிவில், "ஆம் ஆட்சி கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் பலர் கட்சியின் ஊழல் காரணமாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் சீட்டுகளை விற்றதற்காகவும் அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சின் எம்எல்ஏக்கள் அதிருப்தியாளர்களால் தாக்கப்படுகின்றனர். இது போன்ற தாக்குதல் டெல்லி முதலமைச்சருக்கு நடந்து விடக்கூடாது. எனக்கு முதலமைச்சரின் பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது" என்றார்.

  இதற்கு ஆம் ஆத்மி கட்சி தீவிரமான எதிர்வினை ஆற்றியுள்ளது.அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதலமைச்சருமான மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி இடம் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளது. எனவே, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு எதிராக சதி செய்துள்ளது.

  பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் கருத்துக்களை சதித்திட்டத்தை பிரதிபலிக்கிறது. கெஜ்ரிவாலை தாக்கி கொலை செய்ய தனது அடியாட்களை நேரடியாக தூண்டிவிட்டுள்ளார் மனோஜ் திவாரி. எனவே, நேரடி கொலை மிரட்டல் விடுத்த மனோஜ் திவாரியை கைது செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை வைக்கிறது" என்றார்.

  இதையும் படிங்க: வரலாற்றை திருத்தி எழுதுவோம்... நம்மை யாரும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா

  அடுத்த மாதம் தொடக்கத்தில் குஜராத் மற்றும் டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதுவரை இரு தரப்பிற்கும் இதுபோன்ற மோதல் போக்கு தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, BJP