குறைகளை கேட்காவிட்டால் எம்.பி, எம்.எல்.ஏ, அரசு அதிகாரிகளை மூங்கில் குச்சிகளால் அடியுங்கள் - பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங்

அனைத்து அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையின் கீழ் உள்ளனர். உங்களின் குறைகளை கேட்காமல் இருப்பவர்களை ஒரு மூங்கில் குச்சியை எடுத்து தலையில் அடித்து விடுங்கள் என்று கிரிராஜ் சிங் பேசினார்.

  • Share this:
குறைகளை கேட்டறியாமல் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை குச்சியால் அடியுங்கள் என்று மத்திய அமைச்சர்  கிரி ராஜ் சிங் பேசியுள்ளது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

சிறு குறு தொழிற்துறையின் மத்திய இணை அமைச்சரான கிரி ராஜ் சிங், பீகாரில் உள்ள தனது சொந்த தொகுதியான பெகுசாராயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது பொதுமக்கள் புகார் அளிக்க சென்றால் அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக தன்னிடம் பலரும் வந்து குற்றம்சாட்டுகின்றனர் என தெரிவித்தார்.

இது போன்று என்னிடம் வந்து கூறுபவர்களிடம் ஒன்றை கூறிக்கொள்கிறேன். எதற்காக இது போன்ற சிறிய விஷயங்களுக்காக என்னிடம் வருகிறீர்கள்? எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கிராம் அதிகாரிகள், மாவட்ட, மண்டல் அளவிலான அரசு அதிகாரிகள் என அனைத்து அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையின் கீழ் உள்ளனர். உங்களின் குறைகளை கேட்காமல் இருப்பவர்களை ஒரு மூங்கில் குச்சியை எடுத்து தலையில் அடித்து விடுங்கள்.எந்தவொரு சட்டவிரோத வேலையும் செய்ய நாம் அவர்களிடம் கேட்கவில்லை, சட்டவிரோதமானதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

குச்சியால் அடித்தும் வேலை நடக்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ஆதரவாக பின் நிற்பேன் என்றார்”.

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சை கேட்டவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்று ஆர்ப்பரித்தனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினாலும், மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங்கின் இந்தப் பேச்சு அதிர்வலைகளையும் புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: