கும்ப மேளா : கொரோனா அச்சமின்றி ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள்

கும்ப மேளா : கொரோனா அச்சமின்றி ஆயிரக்கணக்கில் கூடிய பொதுமக்கள்

கும்பமேளா

உலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருவிழா கொண்டாட்டங்களை தவிர்க்கவும் பல மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் நடைபெற்று வரும் கும்பமேளா விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி இன்றி கலந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உலகின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பமேளா திருவிழாவானது கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 30-ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித நீராடலுக்கான முக்கிய நாள்களாக 12, 14 மற்றும் 27 ஆகிய நாள்கள் அறிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த சூழலில் கொரோனா ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளை மீறி மக்கள் இந்த கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

  கும்பமேளா திருவிழாவானது அசாதாரணமான சூழ்நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. ஹரித்வாருக்கு வரும் பக்தர்கள் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் கொரோனா பரவல் தொடர்பான கவலை இல்லை என பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அதிகளவில் பரவாமல் தடுப்பதற்கு தனிமனித இடைவெளிகளை தவிர்ப்பதும் கூட்டங்களை தவிர்ப்பதும் முக்கிய காரணிகளாக இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், புனித யாத்திரைகளின் போது இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  ஹரித்வாரில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் மொத்தம் 2,056 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த பாதிப்பு கடந்த நாள்களை ஒப்பிடுகையில் பலமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நகரத்தில் 173 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் சிகிச்சைப் பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 837 ஆக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐ.ஜி கஞ்ச்யால் பேசும்போது, "கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: