Home /News /national /

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது கருட சேவை

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது கருட சேவை

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    உலகப் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று கோலாகலமாக நடைபெற்றது.  

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்வ விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சேஷ வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார். இந்த அற்புத காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று விமரிசையாக நடைபெற்றது.

    நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மாட வீதியில் பவனி வந்தார். ஏழுமலையானை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு கருட சேவைக்கான பூர்வாங்க நிகழ்ச்சி  நடைபெற்றது. இதனையொட்டி, திருமகள் லட்சுமியின் ஆரம், மகரகண்டி, சகஸ்ரநாமாவளி ஆரம் உள்ளிட்ட ஆபரணங்கள் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தேர் பவனியும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு முடிவடையும் கருட சேவை நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் வண்ண வண்ண மின் விளக்குகள், சிறப்பு மலர் அலங்காரம், கலை நிகழ்ச்சி என ஜொலிக்கும் மலை, பக்தர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Garuda Sevai, Tirumala Tirupati

    அடுத்த செய்தி