ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலையில் மகரஜோதியைக் காண திரண்டுள்ள பக்தர்கள்!

சபரிமலையில் மகரஜோதியைக் காண திரண்டுள்ள பக்தர்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சபரிமலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும், விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

  மகரஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஐயப்பனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

  முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, பந்தளத்தில் இருந்து பம்பை, நிலக்கல் வழியாக கொண்டு வரப்படும் உடைகள் மற்றும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

  இதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இதனைக் காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். மேலும், பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

  இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளும், விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Sabarimala Ayyappan, Sabarimalai Ayyappan temple