உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் காலிக் என்ற மனுதாரர் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பசுவதை செய்த குற்றத்திற்காக தன் மீது காவல்துறை எந்த வித ஆதாரமும் இன்றி வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, தன் மீதான வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.
இதையும் படிங்க; வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை - டிஜிபி சைலேந்திரபாபு
இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதி ஷாமிம் அகமது மேற்கொண்டார். குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை அவர் பிறப்பிக்கும் போது கூறிய சில கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன. நீதிபதி தனது உத்தரவில், பசு சிவன், இந்திரன், கிருஷணர் போன்ற பல கடவுள்களுடன் தொடர்புடைய விலங்கு. பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதத்தையும், முகம் சந்திர, சூரியனையும், தோல்கள் அக்னியையும் குறிப்பவை.
தன்மூலம் பல ஊட்டசத்துக்களை தரும் பசுவை தாயாகவும் பூமி தாயுடனும் நாம் பொருத்திப் பார்க்கிறோம். 20ஆம் நூற்றாண்டு காலத்திலேயே பல ராஜ்ஜியங்களில் பசு வதை அமலில் இருந்துள்ளது. பசுவை கொலை செய்பவர்களும், அதை கொலை செய்ய அனுமதிப்பவர்களும் அவர்கள் உடலில் எத்தனை முடிகள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள் நரகத்தில் உழல்வார்கள்.
பசுவை போலவே காளையும் மதிப்பு மிக்க விலங்கு. அது சிவபெருமானின் வாகனம். இத்தனை சிறப்பு கொண்ட பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காகவும் அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசு செய்யும் என நீதிமன்றம் நம்புகிறது" என நீதிபதி அகமது தனது உத்தரவில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Allahabad, Anti cow slaughter bill, Cow, Cow Slaughter