குற்றவழக்குகளைஎதிர்கொண்டுவருபவர்களைதேர்தல்களில்போட்டியிடதடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றஅரசியல்சாசனஅமர்வுதீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
அப்போது இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று மத்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும் குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிடாமல் செய்ய வேண்டியது அவசியம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். வழக்கின் விசாரணை கடந்த மாதம் 28-ம் தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றப்பின்னணி வழக்குகளில் தொடர்புடையவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். குற்றச்சாட்டு மட்டுமே உடையவர்கள் மீது தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பில் 3 முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளனர்.
குற்றப்பின்னணி உடையவர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கும்பொழுது வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். எந்த கட்சியின் சார்பாக நிற்கிறார்களோ அந்தக் கட்சியின் வலைதள பக்கங்களில் இந்தக் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் நாடாளுமன்றம் சட்டத்திருத்தம் மூலம் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Saroja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.