மறைமுகமாக அறிவுரை கூறிய அத்வானி! பணிவுடன் வரவேற்ற மோடி

பாஜக-வின் நீண்டகால தலைவரான அத்வானிக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 75 வயது-க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது வலைதளப் பக்கத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Web Desk | news18
Updated: April 5, 2019, 7:15 AM IST
மறைமுகமாக அறிவுரை கூறிய அத்வானி! பணிவுடன் வரவேற்ற மோடி
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: April 5, 2019, 7:15 AM IST
அரசியலில் மாற்று கருத்துகளைக் கொண்டவர்களை தேசவிரோதிகளாகவோ, எதிரிகளாகவோ பாஜக கருதியதில்லை என்று அதன் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக-வின் உண்மையான நிலைப்பாட்டை அத்வானி வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

பாஜக தொடங்கப்பட்ட தினம், நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாஜக நிறுவனர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, அவரது வலைதளப் பக்கத்தில் கட்சித் தொண்டர்களுக்கு கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ’கடந்த 1991-ம் ஆண்டு முதல் மக்களவைக்கு தன்னை 6 முறை தேர்ந்தெடுத்த காந்திநகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

14-வது வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தது முதலே, தாய்நாட்டுக்கு சேவையாற்றுவதே தனது நோக்கமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாழ்க்கையின் முக்கிய கொள்கையாக முதலில் தேசம், அடுத்தது கட்சி, கடைசியில் தன்னலம் பற்றியது என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

வேற்றுமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை என்றும்,

பாஜக தொடங்கப்பட்டது முதலே, அரசியல் ரீதியாக வேறுபட்டு இருப்பவர்களை எதிரிகளாகவோ, தேசவிரோதிகளாகவோ பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
ஜனநாயகத்தையும், ஜனநாயக மதிப்புகளையும் கட்சிக்குள்ளும், தேசிய அளவிலும் பாதுகாத்தது, பாஜகவின் முக்கிய அடையாளமாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தேர்தலை நடத்துவோர் உள்ளிட்ட அனைவரும் சீராய்வு செய்துகொள்ள வேண்டும் என்று அத்வானி கேட்டுக் கொண்டுள்ளார்.



அத்வானியின் கருத்துக்களை ட்விட்டரில் வரவேற்றுள்ள பிரதமர் மோடி, பாஜகவின் கொள்கையை அத்வானி மிகத் தெளிவாக விளக்கியிருப்பதாக கூறியுள்ளார். அத்வானி போன்ற தலைவர்கள் பாஜக-வை வலிமைபடுத்துவது பெருமையாக இருப்பதாகவும், தாம் பாஜக-வின் தொண்டராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Also see... தேர்தல் 40/40 : கள்ளக்குறிச்சி தொகுதி ஒரு சிறப்பு பார்வை |

Also Read...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626